முருகனை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்

 முருகப்பெருமானை மனமாற பிரார்த்தித்தால், நம் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் வரும். அவர் வெற்றிக்குரிய கடவுள் என்று சொல்லுவார்கள், ஏனெனில் அவர் பக்தர்களுக்கு தைரியமும், ஞானமும், வாழ்வில் முன்னேற்றமும் தருகிறார்.


முருகன் அருளால் கிடைக்கக்கூடிய நன்மைகள்:

1. தடைகள் நீங்கும் – வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் மறைந்து, நல்ல வழிகள் கிடைக்கும்.

2. தைரியம், மனவலிமை பெருகும் – எந்த சூழ்நிலையிலும் நம்மை நம்பி நிலைத்திருக்க உதவுவார்.

3. கல்வியில் வெற்றி – மாணவர்கள், தேர்வெழுதுபவர்கள் முருகனை வழிபட்டால் நல்ல ஞானம் வரும்.

4. தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு – கண் திருஷ்டி, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

5. குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை – உறவுகள் இனிதாக இருக்கும்.

6. உடல்நலம் நல்லபடியாக இருக்கும் – நோய்கள் வராமல் பார்த்துக்கொள்வார்.

7. வேலை, தொழில் வளர்ச்சி – முன்னேற்றம் பெற உதவுவார்.

8. ஆன்மீக முன்னேற்றம் – மனம் அமைதியாக, சந்தோஷமாக இருக்கும்.

முருகனை "ஓம் சரவணபவ" என்று தினமும் மனமாறி ஜெபித்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும். விரதம் இருந்தாலும், அவன் பெயரை மட்டும் நினைத்தாலும் கூட அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்! "முருகா முருகா" என்று அழைத்தாலே அவன் தயவு நமக்கே!


Comments