அம்பானி Family Marriage Jokes | Stand up comedy jokes in Tamil for Ambani Family Marriage

 அம்பானி வீட்டுக் கல்யாணம் - கீர்த்திவாசன் ராஜாமணியும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் கல்யாண ஜோக் மழை பொழிஞ்சுக்கிட்டிருக்காங்க


1.ஜானவாசம் போனும்னு மாப்பிள்ளை குதிக்கறார். சரி போய்த் தொலையட்டும். அதுக்காக ஹெலிக்காப்டர் பின்னாடி மயில் தோகை செட்டு போடச்சொல்றாண்டீ, சம்பந்தி


2.அம்பானி, பணக்காரர்தான்.. அதுக்காக ஐனூத்தியோரு சுத்து முறுக்கு கேட்டா நான் எப்படி சுத்துவேன் ?


3. வரதட்சனையா ஃபெராரி கேட்டா பரவாயில்லை.. இவா ஃபெராரி கம்ப்பெனியே கேக்கறான்னா !


4. என்னதான் பணக்காராள்னாலும், சம்ப்ரதாயத்தை மாத்துவாளோ ? காசி யாத்திரைக்கு பதில் ஸ்விட்சர்லாந்து யாத்திரை போனுங்கறா !


5. ஏண்டா, மாலை மாத்தறதுக்கு மாமா தூக்கறதுதானே முறை.. இவா பாட்டுக்கு ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர்ல உக்காந்துண்டு மாலையைத் தூக்கிப் போட்டுண்டிருக்கா !


6.ஏன் ஸ்வாமி, கோச்சுண்டு போறேள் ?


பின்ன என்னடா பாச்சு.. வாத்யார் வேஷ்டி பத்தாறு எடுக்கறதுதானே வழக்கம்.. இவா பணக்காராளம்.. அதுக்காக இருபத்தாறு எடுத்தா ? நான் என்ன பஞ்சகச்சம் கட்டிக்கவா ? தசகச்சம் கட்டிக்கவா ? கச்சம் பிடிச்சுக்க இங்கிலாந்து ராணி மாதிரி பின்னாடி ரெண்டு பேர் கூட்டிண்டு வரனும்.


7. என்னதான் அம்பானின்னாலும், என் கிட்ட கை நீட்டித்தான் ஆகனும் !


ஓ.. நீங்க அவரை விட பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்டா ?


இல்லை, மெஹந்தி போட வந்திருக்கேன்.. !


8. “சார், வழி விடுங்கோ.. ! கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் செய்ய திருப்பதிலேர்ந்து.."


"ப்ரசாதம் வந்திருக்கா ? "


“இல்ல, பெருமாளே வந்திருக்கார் !"


9. “ஏண்டி, மொகம் வாடிக் கெடக்கு ?"


"அம்பானி மாமி, கல்யாணத்துக்கு ஹுண்டாய் க்ரேட்டா வாங்கிக் கொடுத்திருக்கா !"


"பேஷ் ! பேஷ் ! அதுக்கு ஏன் சோகமாருக்கே ?"


“சுந்தரிக்கு மட்டும் ராமர் பச்சைல, ஜரிகை வெச்சு இருக்கு.. எனக்கு வெறுமன போச்சம்பள்ளி மாதிரி பச்சைக் கலர்.. வேணும்னே அவமானப்படுத்தியிருக்கா !"


10. என்னன்னா போறச்சே ஒரே பொட்டியோட போனேள்.. வரும்போது போர்ட்டர்லாம் வெச்சு நாலு சூட்கேஸோட வரேள் ? அம்பானி கல்யாண ரிட்டர்ன் கிஃப்ட்டா ?


வெறுப்பேத்தாதடி.. எல்லாம் கட்டுச்சாதக் கூடை, அதுல ரெண்டு சூட்கேஸ் புளியுஞ்சாதம்.. ஒண்ணு ஈரமாக் கசிஞ்சிண்டிருக்கே, அது தயிர்சாதம். பிசினாரி.. cabin baggageல, எலுமிச்சங்கா ஊருகா கொடுத்திர்க்கான்..


கல்யாணத்துக்கு வந்த ரஜினி "மண்டபம் சூப்பரா அப்டியே தாஜ் மஹால் மாதிரி இருக்கு"ன்னார்..


"நல்லாப் பாருங்க சார், அது தாஜுமஹாலேதான் !"


"என்ன சார், இலையில ஒரு முப்பது ஐட்டம்தான் இருக்கு ? ரொம்ப சிக்கனமான கல்யாணமோ ? "


"யோவ் நல்லாப் பாரு.. அது இலை இல்ல.. ஸ்வீட் பீடா !"


"ஏன்னா.. கல்யாணம் பேஷா முடிஞ்சுது.. கன்னத்துல கைவெச்சுண்டு உக்காந்திருக்கேள் ? "


"இல்லடி, அம்பத்தேழாயிரம் வால்க்ளாக் வந்திருக்கு ரெண்டு லட்சம் கப் அண்ட் சாசர் வந்திருக்கு.. ரொக்கமா மொய்க்காசா பைஞ்சாயிரம்தாண்டி வந்திருக்கு !"


நீங்க என்ன தான் பெட்ரோல் கிணறாவே வச்சிருந்தாலும், ஹோமத்துக்கு நெய் விடறதுதான் முறை. பெட்ரோல் டீசல்லாம் ஆகாது ஸ்வாமி


அம்மி மிதிச்சு அருந்ததி பார்னா ஆகாயத்துல போய் தான் பாப்பேன், எட்றா ப்ளேனைங்கறான்...


இருந்தாலும், நம்ம கோபு மஹா கஞ்சண்டா ! அம்பானி கல்யாணத்துக்குப் போய், நூத்தியோரு ரூபாய் மொய் வெச்சுட்டு வந்திருக்காண்டா.. நேக்கு அது கூட பரவாயில்ல.. மொய்க் கவர் கூட வாங்காம, பத்திரிக்கை கவர்லயே போட்டுக் கொடுத்திருக்காண்டா. !


மாப்பிள்ளக்கு நிச்சயதார்த்தம் மோதிரம் எத்தனை கிராம்லன்னு கேட்டா அதெல்லாம் எங்க ரேஞ்சுக்கு கிலோ கணக்குதான்னு சொல்றாளே... அதென்ன விரலா...விறகுக்கட்டையா?


தாலி கட்ணோன்ன ஜூஸ் கொடுக்கனும்.. ஒரு லக்‌ஷம் பேருக்கு எப்ப கொடுத்து முடிக்கறது.. பேசாம fire alarm sprinklerல ஜூஸை ஊத்தி தெளிச்சுடுவோம்.


ஏம்ப்பா பொண்ணுக்கு எவ்ளோ கிலோ நகை போடப்போறீங்கனு கேட்டா நாலஞ்சு லாரி தனிஷ்க் வாசல்ல நிக்க வச்சிருக்கேன்.. அட்ரஸ் சொல்லுங்க அனுப்பி விடறேங்கறான்


அம்பானி என்ன சொல்லிட்டுப் போறார் ? பையனாத்து ரூம்ல சுடு தண்ணி வரலைன்னு சொல்லிட்டுப் போறார்.. ? என்னதான் கோடீஸ்வரன் கல்யாணம்னாலும், இந்த மாதிரி நடந்தாத்தான் அழகு.


வர்றவங்களுக்கு ரிடர்ன் கிப்டா Audi தரட்டுமான்னு அம்பானி இப்பதான் கேட்டார்.. நாந்தான் ஏற்கனவே பொலூஷன் பிரச்னை. அதனால எலெக்ட்ரிக் காராவே கொடுத்துருங்கன்னு சொல்லிட்டேன்


சீர் பட்சணம் 21 தட்டு தான் வழக்கம்னா, 21000 தட்டு கேக்கறதெல்லாம் நியாயமா.....


அம்பானி சரியான அல்பம்டா.. !


ஏன் அப்படிச் சொல்றே ? 


கல்யாணத்துக்கான மொத்த செலவும் என்னுது.. ஏர்போர்ட்லேர்ந்து ஆரம்பிச்சு ஊரையே வளைச்சு கல்யாணம் நடத்திடறேன்.. ஆனா, மாப்பிள்ளை ஜானவாச சபாரி சூட்டு மட்டும் நீங்க செலவு செய்யனும்னுட்டார்.


அம்பானி வீட்டு கல்யாணமாவே இருந்தாலும், வெத்தலைல தான் ஓய் பீடா போடணும்... வாழையிலைலலாம் மடிக்க முடியாது ஓய்


என்னடி இது மண்டபத்து வாசல்ல பெரிய assembly lineல factory மாதிரி பெரிய மெஷின் ஓடிண்டிருக்கு ? 


அதுதாண்டி சாத்துக்குடி பை போடற மெஷின். ஒரு நிமிஷத்துக்கு நானூறு சாத்துக்குடி பை போட்டுடும். வெத்தலையை கிழிச்சுப் போடறதுக்குன்னே தனி மெஷின் இருக்குன்னா பாரேன்.


கோடீஸ்வரன்தான்.. இல்லைங்கல..அதுக்காக கூரப் புடவை கட்டிக்கம் முடியாது, பங்களாப் புடவைதான் கட்டிப்பேன்னா என்னம்மா ? அட, அது கூடப் பரவாயில்லை.. கையில வங்கி மாட்டிக்கோன்னா, icici ஆ ? hdfc யான்னு கேக்கறா !


ஏம்ப்பா... ஹனிமூனுக்கு செவ்வாய்க்கு அனுப்புங்கறானே...


ஸ்நாக்சுக்கு டீ பிஸ்கெட் அனுப்பினா,  இப்படி கோல்ட் பிஸ்கட் வந்தாலே ஆச்சுன்னு சம்பந்தி சண்டை போடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்காணோம்....


"என்ன உலகப்புகழ் இசைக் கலைஞர் Yanni ரொம்ப பதட்டமா இருக்கார் ?"


"பின்ன தாலி  கட்றச்சே, சகல வாத்யம்னோன்ன என்ன வாசிக்கறதுன்னே  தெரியாம ட்ரம்ஸைத் தடவிண்டிருக்கார்  !"


என்ன சார் மண்டபம் வாசல்ல பஸ் விட்டுருக்கீங்க ? 


இல்ல மொய் கொடுக்க க்யூ நாலு கிலோமீட்டர் தள்ளி ஆரம்பிக்குது.. நம்ம விருந்தாளிங்க கஷ்டப்படக்கூடாதுன்னு பஸ் விட்டிருக்கோம்.


கூட்டம் ஜாஸ்தி்ங்கறதுனால ரிசப்ஷன் பந்தில சாப்படறச்சே பின்னாடி நின்னு தொந்தரவு பண்றவாள ஒரு ட்ரோன் அலேக்கா தூக்கிண்டு போய் வாசல்ல விட்டுடுமாம்.


பிள்ளையாத்துக்காரா கோடிஸ்வராளாம்!!! அதுக்காக பாரா'த்துக்கு எல்லாரும் ஹெலிகாப்டர்லயே வந்து பாரசூட்ல மண்டபத்து வாசல்ல தொபுக்கடீர் னு 

குதிச்சா நன்னாவாருக்கும்! அலப்பறைக்கு ஒரு அளவேஇல்ல போங்கோ!


ஏண்டாப்பா, அம்பானி, என்ன பெரிய அம்பானி? கல்யாண மண்டபத்ல பெரிய டி.வி. ஸ்கிரீன் வைக்கணுமோல்யோ? 


சித்த சும்மா இருங்கண்ணா, நாம உள்ள வர்றச்சே எல்லார் கையிலயும் ஒரு நோட்டு  கொடுத்தாளே.. அது என்னன்றேள்? Tab-ண்ணா.. அத ஓப்பன் பண்ணி கல்யாணத்தை லைவ்வா பாருங்கோ..


என்னடி வேம்பு.. மாப்பிள்ளையாத்துக்காரா பணக்காராளா இருக்கலாம்.. ஆனா சம்பந்தி சண்டையெல்லாம் அவாளாத்தான் போடனும். பத்து லட்சம் கொடுத்து மைக் டைசனையெல்லாம் வாடகைக்கு எடுத்திருக்கா !

Comments

Post a Comment