அத்திப்பழம் | Fig | அத்திப் பழத்தின் மருத்துவ குணங்கள்
அத்திப்பழம்:
அத்திபழம் இருவகை உண்டு.
ஒன்று நாட்டு அத்தி .இதை சமைத்து உண்ணலாம். மற்றது சீமை அத்தி.பெரியதாக இருக்கும். இனிப்பு சுவையுடையது.
தேனில் பக்குவபடுத்தபட்ட சீமை அத்திப்பழம் இரத்த விருத்தி செய்யும். உடல் பருக்கும். வெப்பத்தை தணிக்கும். மலசிக்கலை நீக்கும்.
பதப்படுத்தாத அத்திப்பழத்தின் விதைகளைத் தனியாக எடுத்து உலர்த்தி தூள் செய்து தினமும் மூன்று வேளை சிறிதளவு தூளோடு தேன் சேர்த்து காலை,மாலை சாப்பிட்டு வர சிறுநீரில் உள்ள சர்க்கரை சத்தை முறையாகக் குறைத்து விடும்.
நீரழிவு நோய்க்கு அத்திப்பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வைட்டமின் ஏ, பி, சி, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் , சுண்ணாம்பு, இரும்பு மற்றும் எரியச் சத்துகள் கொண்டவை.
நான்கு அத்திப் பழத்திலுள்ள வைட்டமின் ஏ சத்து ஒரு கோழி முட்டையிலுள்ள வைட்டமினுக்குச் சமம்.
Comments
Post a Comment