வெண்டைக்காய் புளி குழம்பு | Vendakkai puli kulambu without coconut | lady's finger kulambu

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
கருவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை :
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கருவேப்பில்லை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதனுடன் வெண்டைக்காயை சேர்த்து பிசுபிசுப்பு போகும் வரை ஐந்து நிமிடம் எண்ணெயில் வதக்கவும்.
பின்னர் தேவையான உப்பு சேர்த்து குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள் கலந்து விடவும்.
நன்றாக கலந்து பிறகு அதனுடன் புளி தண்ணீரை சேர்க்கவும்.
புளித்தண்ணீர் சேர்த்தவுடன் மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பத்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறலாம்.
சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்

Comments