கல்யாண வீட்டு சாம்பார் | South Indian Style Sambar |முருங்கைகாய், கத்திரிக்காய் சாம்பார் | Murungakkai sambar |Kathirikkai Sambar |Vegetable Sambar in tamil | Drumstick brinjal Sambar in tamil

தேவையான அளவு :

துவரம் பருப்பு - 1 கப்
பூண்டு - 4 பல்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
விளக்கெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
முருங்கைகாய் - 1
கத்திரிக்காய் - 3
புளி தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்

Homemade sambar podi :

https://youtu.be/cvAIvuuMitU

செய்முறை :

துவரம் பருப்பை நன்றாக கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர் குக்கரில் 1 கப் பருப்புக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், விளக்கெண்ணெய் சேர்த்து 4 விசில் விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதில் முருங்கைகாய், கத்திரிக்காய் சேர்த்து புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அதனுடன் சாம்பார் பொடி சேர்த்து காய் வேகும் வரை கொதிக்கவிடவும்.
பின்னர் வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சுவையான சாம்பார் ரெடி.

Comments