Prawn gravy | இறால் கிரேவி | Prawn recipes in tamil | Prawn gravy in tamil |Non veg Recipes in tamil | Side dish for idly, dosa, chappathi and rice | Side dish for chappathi in tamil |Prawn kulambu in tamil | இறால் குழம்பு

தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
பட்டை - 3
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் - 5
இறால் - 1/2 கிலோ
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
பி‌ன்ன‌ர் அதனுடன் இறாலை போட்டு வேக விடவும்.
10 நிமிடம் கழித்து ஸ்டவை அணைக்கவும்.
குறிப்பு : இறாலை 10 நிமிடம் மட்டுமே வேக வைக்கவும். அதிக நேரம் வேக வைத்தால் இறால் ரொம்ப கெட்டி ஆகிடும்.

Comments