தர்பூசணி மசாலா ஜூஸ் |Watermelon juice |Watermelon masala juice

தர்பூசணி மசாலா ஜூஸ்
தேவையானவை:
தர்பூசணி - 1
இஞ்சி - 2 துண்டு
புதினா - சிறிதளவு
எலுமிச்சை பழம் - ஒன்று பெருங்காயத்தூள் - சிறிதளவு மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் பனங்கற்கண்டு - தேவையான அளவு உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
மிக்ஸியில் இஞ்சியையும், புதினாவையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அது போல் தர்பூசணியின் தசைப் பகுதியை வெட்டி எடுத்து கூழாக அரைக்கவும்.
அதனுடன் இஞ்சி புதினா விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு கலந்து கொள்ளவும்.
சுவையான தர்பூசணி மசாலா ஜூஸ் ரெடி.

Comments