காய்கறி கூட்டு |Vegetable kootu in tamil

காய்கறி கூட்டு
தேவையானவை:
துவரம் பருப்பு - கால் கிலோ கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன் பரங்கிக்காய் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 7
பீன்ஸ் - 100 கிராம் (நறுக்கியது) மொச்சைக்கொட்டை - கால் கிலோ சுண்டைக்காய் - சிறிதளவு
துருவிய கேரட் - கால் கப்
கத்தரிக்காய் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
சௌசௌ - கால் கப் (நறுக்கியது) தேங்காய் துருவல் - அரை கப் கொத்தமல்லி - 3 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை:
குக்கரில் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
துருவிய தேங்காயையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து காய்கறிகளைக் கொட்டி வேக வைக்க வேண்டும்.
பாதி வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.
மசாலா கலந்து நன்கு வெந்ததும் மிக்ஸியில் பொடித்து வைத்துள்ள பொருட்களையும், தேங்காயையும் கொட்டி கிளறி விட வேண்டும்காய்கறி கூட்டு . வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி இறக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

Comments