புதினா இறால் கிரேவி |Prawn recipes |Non veg Recipes |Mint Prawn gravy

புதினா இறால் கிரேவி
தேவையானவை:
இறால் - கால் கிலோ
நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
பெரிய வெங்காயம்- 2
நறுக்கிய பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
சீரகத்தூள் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித் தூள் - கால் டீஸ்பூன் தேங்காய் பால் - கால் கப்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
தண்ணீர் - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
செய்முறை:
இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து ஊற வைக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி தழை, மிளகாய், கொத்தமல்லி தூள், சீரக தூள், போன்றவற்றை கொட்டி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் மிக்ஸியில் அரைத்து வைத்த கலவையை கொட்டி கிளறவும்.
பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து விட்டு தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்க தொடங்கியதும் இறால் கலவையை கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கிரேவி பதத்திற்கு வரும் வரை வேக வைத்து விட்டு இறக்கி பரிமாறவும். சுவையான புதினா இறால் கிரேவி தயார்.

Comments