இறால் மிளகு வறுவல் |Prawn pepper fry

இறால் மிளகு வறுவல்
தேவையானவை:
இறால் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பின்னர் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் பச்சை வாசம் நீங்கியதும் இறால்  கலவையை கொட்டி கிளறவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Comments