இறால் ஃப்ரைட் ரைஸ் |Prawn fried rice |Prawn recipes |Non veg Recipes

இறால் ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை:
இறால் - கால் கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 4 (நறுக்கவும்)
முட்டை - 4
பூண்டு - 4 பல்
கேரட் - ஒன்று (நறுக்கவும்) வெங்காயத்தாள் - சிறிதளவு
மீன் சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
செய்முறை:
இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
முட்டையை அடித்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறாலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் .
அதனுடன் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
கேரட்டை சேர்க்கவும், முட்டையையும் ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறி விடவும். நன்கு வெந்ததும் வேக வைத்த சாதத்தை கொட்டி அதனுடன் கிளறவும். அதனுடன் சோயா சாஸ், மீன் சாஸ், மிளகுத்தூள், வெங்காயம், வெங்காயத்தாள் போன்றவற்றை கலந்து வேகவிடவும்.
அவை வெந்து பிரைட்ரைஸ் பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Comments