கூழ் கொழுக்கட்டை |கொழுக்கட்டை |Kolukkatai

கூழ் கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - மூன்று
தேங்காய் துருவல் - கால் கப் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டி பிடிக்காதவாறு கிளறவும்.
கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கி அகன்ற பாத்திரத்தில் கொட்டவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நாலு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க தொடங்கியதும் உருண்டைகளை கொட்டவும்.
அது கொதித்ததும் தேங்காய் துருவலைத் தூவி இறக்கி பரிமாறலாம்.

Comments