சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி |Fish curry |Chettinaad fish curry|Village fish curry |fish gravy |மீன் குழம்பு |Meen kulambu in tamil | கிராமத்து மீன் குழம்பு |Gramarhu meen kulambu

தேவையான பொருட்கள் :
மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
த‌க்கா‌ளி - 6
பூண்டு - 20
மீன் குழம்பு மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (ஊற வைத்து கொள்ளவும்)
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
புளி கரைசலில் மிளகாய் தூள், மல்லி தூள், மீன் குழம்பு மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய பிறகு தக்காளியையும் போட்டு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கியதும் கலந்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
தேவையான உப்பையும் சேர்த்து கிளறி விடவும்.
பச்சை வாசனை போன பிறகு, நன்கு கொதி வந்ததும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும்.
தட்டை வைத்து மூடி போட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.

Comments