வெள்ளரிக்காய் பொரியல் Cucumber poriyal |Cucumber recipes in tamil |vellirikkai poriyal in tamil |வெள்ளரிக்காய் பொரியல் தமிழ்

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
5 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு :தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

Comments