தேங்காய் பால் கஞ்சி |Coconut milk porridge |Thengai paal kanji

தேங்காய் பால் கஞ்சி
தேவையானவை:
பச்சரிசி - கால் கிலோ
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்) சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய், எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பூண்டுவை லேசாக இடித்து கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரிசி, உப்பு, பாசிப்பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி வைக்கவும்.
அது ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.

Comments