Cauliflower gravy |காலிஃப்ளவர் குழம்பு |Cauliflower kulambu in tamil

காலிஃப்ளவர் குழம்பு

தேவையானவை:

காலிபிளவர் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 1
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி பச்சை மிளகாய்-2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவரை வெந்நீரில் லேசாக வேக வைக்கவும்.
பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதி நீரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும் .
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் .
அதோடு காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக பிரட்டவும்.
இதில் தக்காளி, கொத்தமல்லி விழுதை சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைத்து குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் குழம்பு ரெடி

Comments