ஜவ்வரிசி கூழ்

ஜவ்வரிசி கூழ்
தேவையானவை :
ஜவ்வரிசி - அரை கப்
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
ஜவ்வரிசியை கழுவி 2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
மிளகாய், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பச்சை வாசம் நீங்கியதும், ஜவ்வரிசியை கொட்டி சிறு தீயில் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து கூல் பதத்திற்கு வந்ததும், இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து ருசிக்கலாம்.

Comments