பால் போளி

பால் போளி
தேவையானவை :
ரவை - ஒரு கப்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
பால் - ஒரு லிட்டர்
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை:
சிறிதளவு நீர் ஊற்றி ரவை, மைதா ஆகிய இரண்டையும் பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பூரியாக தயார் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் சிறு தீயில் வாணலியை வைத்து பால், ஏலக்காய்த்தூள், சர்க்கரை ஆகியவற்றை கொட்டி கொதிக்க வைக்கவேண்டும்.
பூரியில் உள்ள எண்ணெய் வடித்த பிறகு அதனை கொதிக்கும் பாலில் சிறிது நேரம் போட்டு எடுக்க வேண்டும். இறுதியில் காய்ச்சிய பாலில் பூரிகளை போட்டு ஊறவைக்கவேண்டும்.
அப்படி செய்தால் போளி மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

Comments