சோயா 65 |soya 65

சோயா 65

தேவையானவை:

சோயா - கால் கிலோ
கடலை மாவு - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சூடான நீரில் சோயாவை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதனை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, சிக்கன் 65 மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சோயா 65 தயார்.

Comments