சுட்ட இனிப்பு தேங்காய் |ஆடி 1 |aadi special sweet coconut

சுட்ட இனிப்பு தேங்காய்
தேவையானவை :
தேங்காய் - 4
பச்சரிசி - ஒரு கப்
பொட்டுக்கடலை - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பொடித்த வெல்லம் - ஒரு கப்
எள் - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்களின் வெளிப்பகுதியில் உள்ள துரும்புகளை நீக்கி நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
தேங்காய்களில் உள்ள மூன்று கண்களில் ஒன்றை துளையிட்டு உள்ளிருக்கும் நீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காயினுள் பச்சரிசி, வெல்லம், பொட்டுக்கடலை, ஏலக்காய் தூள், எள், சர்க்கரை மற்றும் தேங்காய் நீரை ஊற்றி துளையை குச்சி கொண்டு மூடி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு தேங்காய் கருமை நிறத்திற்கு மாறும் வரை நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் உடைத்து சுவைக்கலாம்.
சுவையான சுட்ட இனிப்பு தேங்காய் தயார்.

Comments