குழந்தைகளுக்கு எப்பொழுது திட உணவு(solid foods) கொடுக்கலாம்|how to start solids |எப்படி உணவு கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு எப்பொழுது திட உணவு கொடுக்கலாம்?
குழந்தைகள் எப்போது திட உணவு சாப்பிட தயாராகிறார்கள்?
Readiness of starting solid foods for babies :

1. குழந்தைக்கு கண்டிப்பா 180 நாட்கள் (6 months) முடிந்திருக்க வேண்டும். அதுவரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
2. குழந்தை அவுங்களே உட்காரணும் உங்க உதவியோட அல்லது உங்க உதவி இல்லாமல் அல்லது இரண்டு கை ஊன்றி உட்கார வேண்டும். சில நொடிகளாவது உட்கார முடியனும்.
3. 'Tongue thurst' னு சொல்வாங்க நாக்க வச்சு தள்ளுவது வெளிய அது அவங்க பண்ணாம குடுக்கிற சாப்பாட்டை வாய் உள்ள எடுக்க தெரியணும்.
4. நீங்க சாப்பிடும்போது ஆர்வம் காட்டணும், உங்க சாப்பாட்டை வாங்க வரனும் இல்லை அழனும்,சாப்பிட்டை பார்த்தா ஜொல் வரலாம், வாய் அசைக்கலாம் அசை போடுர மாதிரி.

How to start solids for babies :

எப்படி திட உணவு கொடுக்கலாம்?

1. குழந்தைய மடியில அல்லது சேர்ல உட்கார வைத்து கொடுக்கலாம். படுக்க வைத்து கொடுக்க கூடாது, தொண்டைல மாட்டிக்க வாய்ப்புள்ளது.
2. உணவோட பதம் கெட்டியா இருக்கணும். தண்ணி மாறி தரக்கூடாது. ஸ்பூன்ல இருந்து கீழே விழாத மாதிரி பதத்துல குடுங்க. கெட்டியான உணவு கொஞ்சம் கொடுத்தாலே நல்லது. தண்ணியா நிறைய கொடுக்கிறது விட கெட்டியா கொடுக்கறது தான் சத்து.
3. 6 மாசத்துக்கு 1 வேளை சாப்பாடு, 7 மாசத்துக்கு 2 வேளை சாப்பாடு, 8 மாசத்துக்கு 2 வேளை சாப்பாடு அதோடு 1 ஸ்நாக்ஸ், 9 மாசத்துக்கு 3 வேளை சாப்பாடு அதோடு 1 ஸ்நாக்ஸ், 10 மாசத்துக்கு அப்புறம் 3 வேளை சாப்பாடு அதோடு 2 ஸ்நாக்ஸ். 1 வருஷம் வரைக்கும் தாய்ப்பால் தான் முதன்மையான சத்து. 6 மாசத்துல தர கூடிய உணவு வேக வைத்த காய்கறிகளை மசித்து கொடுக்கலாம், பழங்களை மசித்து தரலாம், கஞ்சி தரலாம்.
4. தாய்ப்பால் கொடுத்து 30-40 நிமிடம் கழித்து சாப்பாடு கொடுக்கனும். அப்ப தான் ரொம்ப பசியும் இருக்காது, வயிரும் ஃபுல்லா இருக்காது,அவுங்க சாப்பிடுவாங்க.
5. புதுசா குடுக்கற உணவ காலை அல்லது மதியத்திற்கு உள்ள குடுங்க, allergy எதாவுது வருதானு பாருங்க. அப்படி வந்தா அந்த உணவ கொஞ்ச நாளுக்கு அப்புறம் குடுங்க. சுலபமா ஜீரணம் ஆக கூடிய உணவ அடுத்த நாள் குடுக்கலாம்.
6. முதல்ல ஒரு உணவு குடுத்துட்டு allergy வரலனா அதோட சேர்த்து வேரொரு உணவு குடுக்கலாம்.
7. தினமும் ஒரு புதிய உணவு குடுக்கலாம்.
8. சமம் ஆனா உண‌வா சாப்பிட குடுக்கணும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் எல்லாம் இருக்கிற மாதிரி.
சில உணவுகள் முதல் தடவை பிடிக்காது, கொஞ்ச நாள் இடைவெளி விட்டு குடுத்து பாருங்க, சாப்புடுவாங்க. சில முறை 20 டைம்ஸ் வேணாம்னு சொல்லி அடுத்த முறை சாப்புடுவாங்க.
9. முதல்ல 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் தான் சாப்புடுவாங்க. போக போக கொஞ்ச நெறையா  சாப்புடுவாங்க.
10. கைல சாப்பாட்டை மசித்து குடுங்க. சில சாப்பாட்டை கைல மசிக்க முடியாது, அதை Masher வச்சு மசிச்சு குடுக்கலாம். ஆனா அது 6 மாசத்துக்கு மட்டும் தான்.
7-8 மாசத்துல இருந்து நீங்க சாப்பிடுற சாப்பிடையே உப்பு இல்லாம காரம் கம்மியா குடுக்கலாம்.
11. பழங்களை பச்சையாக தான் குடுக்கணும், வேக வைத்து கொடுக்க கூடாது, வேக வைச்சா சத்து போய்டும். காய்கறிகளை வேக வச்சு தான் தரனும்.
12. 7 மாசத்துல இருந்து finger foods தரலாம். அதாவது வேக வைத்த முட்டை, பழங்கள், பொரி.
13. கொமட்டுர மாதிரி முதல்ல பண்ணுவாங்க, அது சாதாரணம் தான், அப்படி தான் பண்ணுவாங்க. அவுங்க முன்னாடி சாப்பாட முழுங்கி காட்டுங்க, சாப்டுட்டு காட்டுங்க, மென்னு காட்டுங்க, அப்ப தான் அவுங்க கத்துபாங்க.
14. சில குழந்தைகள் சாப்பிடும் போதே motion போவாங்க, சாப்பிட்ட உடனே போவாங்க. பயப்படாம சாப்பாடு கொடுங்க. நார்மல் தான்.
இரும்பு சத்து நிறைந்த உணவுகளை குடுங்க.
15. உடம்பு சரியில்லை என்றால், பல் வளருது என்றால் சரியா சாப்பிட மாட்டாங்க. அதனால வற்புறுத்தாதிங்க.
பிடித்த உணவு கொடுங்க. புதுசா உணவு எதுவும் குடுக்க வேணாம். அந்த நேரத்துல தாய்ப்பால் அதிகம் கொடுங்க.

Comments