ரமண மகரிஷி - நான் யார் என்று தெரிந்து கொள்வதன் முக்கியத்துவம்

தெய்வத்திரு ரமண மகரிஷி அவர்களிடம் நான் யார் என்ற கேள்வியை கேட்டதற்கு இணங்க, ஒரு முறை அவர் சீடர்களுக்கு கூறிய அருள் மொழிகளின் தொகுப்பே இந்தக் கட்டுரை..



ரமண மகரிஷியின் சில கூற்றுகள் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டுள்ளது அவற்றை ஒன்றுக்கு இருமுறை படித்து அதன் உட்பொருளை உள்வாங்கிக் கொள்ளுதல் சிறப்பு.

ஒரு மனிதன் 'தான் யார்' என்று எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும் 

அனைத்து உயிர்களும் துன்பம்  இல்லாமல் எப்பொழுதும் நிம்மதியாகவும், இன்பமாகவும் இருக்க விரும்புகின்றன.

 மற்ற எல்லா உயிர்கள் மீதும் எனக்கு அன்பு இருப்பதாலும் அத்தகைய அன்பிற்கு நான் கொண்டிருக்கும் நிம்மதியான மனநிலையே காரணம் என்று நான் உணர்கிறேன்.

அத்தகைய மனமற்ற நித்திரையில் நான் தினமும் அனுபவிக்கும் அந்த நிம்மதியை நீங்களும் அறியவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் தன்னைத்தானே அறிதல் வேண்டும்.
அதற்கு "நான் யார்" என்னும் கேள்வி மிக முக்கியமானதாகும்.

Comments