பொங்கல் குழம்பு |Side dish for pongal
பொங்கல் குழம்பு தேவையானவை துவரம்பருப்பு ஒரு கப் பச்சரிசி 100 கிராம் காய்கறிகள் - (விருப்பமான காய்கறிகள்) ஒவ்வொன்றும் ஒரு கப் நறுக்கியது (சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், பச்சை மொச்சை கொட்டை, வாழைக்காய், அவரக்காய்) தேங்காய் துருவல் 1 கப் தக்காளி ஒரு கப் சிறிதாக நறுக்கியது புளி சிறிதளவு மிளகாய் தூள் சிறிதளவு மல்லித் தூள் 1 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் சீரகம்-1டீஸ்பூன் சோம்பு 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி தழை ஒரு கப் உப்பு தேவையான அளவு
செய்முறை :குக்கரில் பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும் புளியை நீரில் ஊற வைத்துக் கரைத்துக் கொள்ள வேண்டும் வாணலியில் பச்சரிசியை கொட்டி பொன்னிறமாக வறுக்க வேண்டும் அதனுடன் மிளகு சோம்பு சீரகம் ஆகியவற்றையும் வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும் பரங்கிக்காய் சர்க்கரைவள்ளிக்கிழங்கு பச்சை மொச்சை கொட்டை வாழைக்காய் தக்காளி அவரக்காய் ஆகியவற்றை ஒன்றாக வேக வைக்க வேண்டும் அவை பாதி வெந்ததும் மிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் மஞ்சள் தூள் தூவ வேண்டும் புளியை கரைத்து அந்த நீரையும் ஊற்றி கொதிக்க விடவேண்டும் பின்னர் வேகவைத்த பருப்பையும் தேங்காய்த் துருவலையும் கொட்டி கிளறி விட வேண்டும், குழம்பு நன்றாக கொதித்து வரும்போது பொடித்து வைத்திருக்கும் பச்சரிசி கலவையை தூவ வேண்டும் அவை மசாலாவுடன் கலந்து நன்கு வெந்ததும் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழையை கொட்டி இறக்கவேண்டும் சுவையான பொங்கல் குழம்பு ரெடி.
Comments
Post a Comment