Radish soup | முள்ளங்கி சூப் |mullangi soup in tamil

முள்ளங்கி சூப் :

தேவையானவை :
முள்ளங்கி - 2
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
குக்கரில் முள்ளங்கி, மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை போட்டு போதுமான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
2 விசில் வந்ததும் இறக்கி  ஆறியதும் மூடியைத் திறந்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
பின்னர் வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய சூப்பை சிறு தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு மிளகுத்தூள் சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான முள்ளங்கி சூப் தயார்.

Comments