Pregnancy tips | Foods to avoid during pregnancy |கர்ப்பகாலத்தில் காப்பி குடிக்கலாமா?
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காபியில் கலந்திருக்கும் காபினை அதிகமாக நுகரும் போது குழந்தையின் கல்லீரல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் குழந்தை வளர்ந்து ஆளாகும்போது இளமைப் பருவத்தில் கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும். கர்ப்பிணிகள் தினமும் காபி பருகும் போது மன அழுத்தத்தையும் வளர்ச்சிக்கான ஹார்மோன் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். கர்ப்பிணிகள் அதிகம் காபின் உட்கொள்ளும் பட்சத்தில் மன அழுத்த ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது.
அது கருவில் இருக்கும் குழந்தையின் கல்லீரல் வளர்ச்சியை தடுக்கிறது .
தாய் மூலம் காப்பினை நுகர்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல.
கர்ப்ப காலத்தில் பெண்கள் காப்பினை சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும், ஒருவித ஏக்கம் தோன்றும் இதுபோன்ற சூழ்நிலையில் மனதை இதமாக்கும் அதற்காக சிலர் காபியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
அதில் இருக்கும் அதிக அளவு காபின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணி பெண்ணுக்கு அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் கல்லீரலுக்குப் தீங்குவிளைவிக்கும். அதேவேளையில் அதிகப்படியான காபினை உட்கொள்வதால் தூக்கம் தடைபடுவதால் கர்ப்பிணிக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
Comments
Post a Comment