How to choose jewellery for your face shape
முகத்திற்கு ஏற்ற நகைகள்
பெண்கள் ஆபரணங்கள் வாங்க செல்வதற்கு முன்பாக தங்கள் முக அமைப்பை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முக வடிவத்திற்கு பொருத்தமான ஆபரணங்களை தேர்ந்தெடுத்து அணிவது கூடுதல் அழகு சேர்க்கும்.
வட்டமான முகம் அமைப்பைக் கொண்டவர்கள் கழுத்தையொட்டி ஆபரணங்கள் அணிவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு நீளமான ஆபரணங்களும் வளைவுகள் இல்லாமல் நேராக இருப்பது கூடுதல் அழகு சேர்க்கும். அவர்கள் வட்டவடிவிலான ஆபரணங்களையும் தவிர்க்க வேண்டும். கற்கள் பதித்த வட்டமான ஆபரணங்களும் அவர்களுக்கு அளவுக்கு வசீகரம் சேர்க்காது. காதுகளில் நீளமாகத் தொங்கும் ஆபரணங்கள் அவர்கள் தேர்ந்தெடுத்து அணியலாம்.
நீள்வட்ட முக அமைப்பைக் கொண்டவர்கள் பலவிதமான ஆபரணங்களை அணிந்து மகிழலாம். கழுத்தை ஒட்டியோ அல்லது நீளமாகவும் நெக்லஸ் அணியலாம் வித்யாசமான காதணிகளையும் பயன்படுத்தலாம். பெரிய வளையங்கள் மற்றும் தொங்கும் ஆபரணங்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
செவ்வக வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் கழுத்தை ஒட்டிய ஆபரணங்கள் அணிவது தான் பார்க்க அழகாக இருக்கும்.
இதய வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் அதிக நீளம் இல்லாத குட்டையான நெக்லஸ் அணியலாம் முக்கோண வடிவத்திலான காதணிகளை தேர்ந்தெடுப்பதும் அவர்களது முகத்திற்கு அழகு சேர்க்கும்.
Comments
Post a Comment