நாவல் பழம் | நாவல் பழம் பயன்கள் | Fruits to avoid during pregnancy |Fruits to eat for diabetes


நாவல் பழத்திற்கு கடவுளின் பலம் என்று சிறப்புப் பெயர் உண்டு. அப்படி பெயர் சூட்டும் அளவிற்கு உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
ஒரு நாவல் பழத்தில் 1.41 மில்லி கிராம் இரும்புச்சத்து, 15 மில்லி கிராம் கால்சியம், 18 மில்லி கிராம் வைட்டமின் சி, சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் பி சத்து நிரம்பியிருக்கிறது. நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராடுவதில் நாவல்பழத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தவும் இது வழிவகை செய்கிறது.
நாவல் பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் சாப்பிட்டு வரலாம். நாவல் பழங்களை துருவி, மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவை தரும்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு பிரச்சனைக்கும் நாவல் பழம் நிவாரணமளிக்கிறது.
வாய் துர்நாற்றமும் நீங்கும் அதில் இருக்கும் ஆன்தோசயனின் புற்று நோய் மற்றும் இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். 
முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நாவல் பழத்தின் கொட்டைகளை உலர வைத்து தூளாக்கி, அதனுடன் பசும்பால் சேர்த்து பிசைந்து இரவில் தூங்கச் செல்லும் முன்பு முகத்தில் பூசி வரலாம். சிறுநீரகக்கல் பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் நாவல்பழக் கொட்டை தூளுடன் தயிர் கலந்து சாப்பிட்டு வரலாம்.
நாவல் பழ ஜூஸ் பருகுவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். வயிற்றுப்போக்கு செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு நாவல் பழ ஜூஸ் நிவாரணமளிக்கும்.
பல் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.
மூல நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.
நோய் எதிர்ப்புச் சக்தியையும்  வலுபடுத்தும்.
மரங்களிலிருந்து சாலை ஓரம் விழுந்து கிடக்கும் நாவல் பழங்களை சாப்பிடக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் இதனை சாப்பிடக்கூடாது.
நாவல் பழம் சாப்பிட்ட பிறகு பால் பருகக் கூடாது.
அளவுக்கு அதிகமாகவும் நாவல் பழங்களை சாப்பிடக்கூடாது.

Comments