வெள்ளரிக்காய் பாயாசம் | Cucumber kheer | Cucumber payasam | Payasam recipes in tamil |Cucumber recipes in tamil

வெள்ளரிக்காய் பாயாசம்

தேவையானவை :

வெள்ளரிக்காய் - 2 (தோல் நீக்கி துருவவும்)
காய்ச்சிய பால் - அரை லிட்டர்
நெய் - 3 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 5 டீஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை :

அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்துகொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை தனியாக வறுத்து எடுக்கவும்.  வாணலியில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து, நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.
பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
அதனுடன் காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து பருகலாம் .
சுவையான வெள்ளரிக்காய் பாயாசம் தயார்.

Comments