Breastfeeding tips | Importance of breastfeeding |தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு

தாய்ப்பால் கொடுத்தால் அழகு பாழ்பட்டுவிடும் என்ற மனநிலை கொண்டிருந்த தாய்மார்கள் குறைந்துவிட்டார்கள். 
அதே நேரத்தில் தனது குழந்தையின் பசியை போக்க தங்களால் போதுமான அளவிற்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். 
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இடையிடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 
அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்தி விடும். குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
என்னவென்றால் குழந்தை பிறந்தபோது இருந்த எடையை விட சில நாட்களில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உடல் எடை குறைய தொடங்கும், சில குழந்தைகள் 10 சதவிகிதம் வரை எடை இழக்கும். பத்து நாட்களுக்குப் பிறகு தினமும் 20 முதல் 30 கிராம் வரை எடை அதிகரிக்கத் தொடங்கும். இவ்வாறு எடை அதிகரிக்கவில்லை என்றால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கு  சிறுநீர் நிறம் மாறுதல், வாய் உலர்ந்து போகுதல், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், சோர்வாக காட்சியளித்தால், பால் குடிக்க தயங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். 
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சூடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும். பிறந்த குழந்தைக்கு தினமும் 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 
அதாவது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 
ஒரு சில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. 
அதனால் பாலூட்டும் தாய்மார்கள் பூண்டை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல் பெருஞ்சீரகத்தையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். பழுக்காத பச்சைப் பப்பாளித் சாப்பிடலாம், அதிலிருந்து ஆக்சிடாசின் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். பப்பாளியை வேக வைத்து குழம்பாக தயார் செய்து சாப்பிடலாம். 
கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும். கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது, அதனை நன்கு கழுவி வேகவைத்து சாப்பிட வேண்டும். வெந்தயத்திற்கும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. 
பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரிப் பருப்பு போன்ற வகைகளில் உள்ளடங்கியிருக்கும் செரோடோனின் பால் உற்பத்திக்கு உதவுகிறது. சுரைக்காயில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது, இதனை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வரலாம். 
மீன் வகைகளில் ஒமேகா-3 அதிகம் உள்ளது, இது பால் சுரப்பை அதிகப்படுத்துவதோடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உதவும். 
பாலூட்டும் தாய்மார்கள் அடிக்கடி பசியை உணர்வார்கள் அவக்கோடா அதற்கு நிவாரணம் தரும்,அதில் இருக்கும் கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். 

உலகில் மிக சிறந்த மருந்து தாய்ப்பால் மட்டுமே.... தாய்மை ஒரு வரம் ஆகும். 

Happy motherhood!!! 
Happy parenting!!! 

Comments