ராகி கூழ்
ராகி கூழ் தேவையானவை ராகி மாவு 2 கப் தண்ணீர் 8 கப் சின்ன வெங்காயம் 100 கிராம் நறுக்கவும் தயிர் 2 கப் மோர் மிளகாய் ஐந்து எண்ணெய் உப்பு தேவைக்கு செய்முறை அகன்ற பாத்திரத்தில் ராகி மாவை கொட்டி அதனுடன் தண்ணீர் உப்பு சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கரைத்துக் கொள்ளவேண்டும் பிறகு அதனை அடுப்பில் சிறு தீயில் வைத்து கட்டி பிடிக்காமல் கிளறி விடவும் ஓரளவு கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கவும் ஓரளவுக்கு ஆறிய பிறகு அதனுடன் தயிரையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மோர் மிளகாயை போட்டு வதக்கவும் அது பொன்னிறமானதும் கூல் கலவையை கொட்டி கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறலாம் சுவையான ராகி கூழ் தயார்
Comments
Post a Comment