கருப்பு கொண்டை கடலை குழம்பு|Black sundal kulambu |sundal gravy in tamil |side dish for chappathi

கருப்பு கொண்டை கடலை குழம்பு

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கப் சின்ன வெங்காயம் - அரை கப் நறுக்கிய தக்காளி - அரை கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் பிரிஞ்சி இலை - இரண்டு கொத்தமல்லித் தழை - தேவைக்கு

செய்முறை:

கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 10 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் ஜீரகம், பிரிஞ்சி இலை போட்டு அவை பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து கிளறுங்கள். அதை தொடர்ந்து கொண்டைக்கடலையை கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

மருத்துவ பலன்:

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும்.
சர்க்கரை நோய்க்கு நல்லது.
இதை தொடர்ந்து உண்பதால் உடல் பொலிவு பெறும்.
படர்தாமரை போன்ற சரும பிரச்சனை வராமல் தடுக்கும்.

Comments