கரிசலாங்கண்ணி கீரை தொக்கு | Karisallankanni keerai thokku | Karisallankanni keerai thokku recipe in tamil | Karisallankanni keerai recipes in tamil |keerai recipes in tamil

கரிசலாங்கண்ணி கீரை தொக்கு

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி கீரை- 1 கட்டு
தேங்காய் துருவல் - அரை கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் நல்லெண்ணெ‌ய் - 3 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கருவேப்பிலை - தேவையான அளவு கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
பொன்னிறமானவுடன் தேங்காய் துருவலை போட்டு கிளறி, கீரையைக் கொட்டி வதக்குங்கள்.
அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

மருத்துவ பலன்:

கரிசலாங்கண்ணிக் கீரையில் இரும்புச்சத்து, கால்சியம் அதிகம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து சாப்பிடுவது ஈரல் மற்றும் கண்களுக்கு நல்லது.
ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும்.
இது மிகச் சிறந்த மூலிகை உணவு.

Comments