கேரட் அல்வா | carrot halwa |carrot halwa in tamil |carrot recipes in tamil
கேரட் அல்வா
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - அரை கிலோ
சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன் முந்திரிபருப்பு - 10
பசு நெய் - 5 டீஸ்பூன்
பசும்பால் - அரை லிட்டர்
தண்ணீர் - 100 மில்லி லிட்டர்
செய்முறை :
அகன்ற பாத்திரத்தில் கேரட்டை போட்டு அதனுடன் ஏலக்காய் தூள், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் கீழே இறக்கி விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் வேக வைத்த கேரட்டை கொட்டி கிளறவும். பின்னர் சக்கரை பவுடரை தூவி நன்றாக கிளறி 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். கேரட் அல்வா தயார்.
மருத்துவ பலன் :
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண்களுக்கு நல்லது.
கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தி கொள்ளலாம்.
Comments
Post a Comment