பேபி கார்ன் 65|baby corn 65| baby corn fry |baby corn fry in tamil

பேபி கார்ன்- 65

தேவையானவை:

பேபி கார்ன் - 10 சாட்
எண்ணெய் - தேவையான அளவு மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் தயிர் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன் சமையல் சோடா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பேபிகார்னை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
மைதா, அரிசி மாவு, சோள மாவு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சமையல் சோடா, எலுமிச்சைச் சாறு போன்றவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவைக்குள் பேபிகார்னை புரட்டி கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சுவையான பேபி கார்ன் - 65 தயார்.

Comments