பன்னீர் - 65| panneer 65 | paneer fry in tamil
பன்னீர் - 65
தேவையானவை:
பன்னீர் - கால் கிலோ
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். அவற்றுடன் மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
இறுதியில் பன்னீர் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான பன்னீர் 65 தயார்.
Comments
Post a Comment