மரகோதுமை ரொட்டி | மரகோதுமை ஸ்பெஷல் ரொட்டி | Rotti recipes in tamil |wheat recipes in tamil

தேவையானவை:

மரகோதுமை மாவு - 1 கப்
சூடான தண்ணீர் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் மர கோதுமை மாவை கொட்டி அதனுடன் உப்பு மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டிகளாக தயார் செய்து கொள்ளவும்.
அந்த ரொட்டிகளை உலர்ந்த கோதுமை மாவில் போட்டு புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் ரொட்டிகளை சுட்டெடுக்கவும்.

மருத்துவ பலன்:

மர கோதுமையானது கோதுமை வகையை சார்ந்தது அல்ல.
மைதா மாவில் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் 'குளூட்டன்' என்ற வேதிப் பொருள் உண்டு.
அது ஜீரண பிரச்சினையை உருவாக்கும்.
இதில் குளூட்டன் கிடையாது.
தானிய வகைகளை காட்டிலும் இந்த கோதுமையில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது.
புரதச் சத்தும் அதிகம் கொண்டது.
சைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த மர கோதுமையை உண்டால் அதிக புரத சத்து கிடைக்கும்.
இதில் ரூட்டின் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகமாக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆஸ்துமா பிரச்சினையை போக்கும்.
முடி,சருமம், கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.

Comments