செட்டிநாடு கறி பிரட்டல் |மட்டன் பிரட்டல்| chettinaad recipes in tamil |mutton recipes in tamil

தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறு கொத்து
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ - சிறிதளவு

அரைக்க:

பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு

செய்முறை :

கறியை மீடியமான துண்டுகளாக நறுக்கி வாங்கி வரவும்.
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றில் தேங்காயை தனியாகவும், மற்ற பொருட்களை தனியாகவும் அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ போட்டுத் தாளிக்கவும். பின் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி கறியை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
பின் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரைத்த பெருஞ்சீரகம் மசாலா விழுதைப் போட்டு 5 நிமிடம் நன்றாக கிண்டவும். இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும். வெந்ததும் குக்கரை திறந்து தேங்காய் விழுதை சேர்த்து மேலும் 5 நிமிடம் மூடாமல் வேக வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் போட்டு தாளித்ததும் நறுக்கி 2 சின்ன வெங்காயம், கறிவேப்பிலையை போடவும்.
இதைப் குழம்பு கலவையில் போட்டு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
இப்பொழுது சுவையான செட்டிநாடு கறி பிரட்டல் ரெடி.

Comments