செட்டிநாடு ஸ்பெஷல் மீன் குழம்பு | செட்டிநாடு மீன் குழம்பு | மீன் குழம்பு |chettinaad fish curry in tamil | fish kulambu in tamil |fish recipes in tamil
தேவையான பொருட்கள்:
மீன் - அரை கிலோ
தேங்காய் - அரைமூடி
மிளகு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி-3
பூண்டு-10 பல்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
பல்லாரி - 2
தனியா தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
புளியை தண்ணீரில் கரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
தேங்காய், மிளகு, சீரகத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இத்துடன் நறுக்கிய பூண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இக்கலவையுடன் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானதும் கழுவி வைத்துள்ள மீனை போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
இறக்கும்போது மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் மீன் குழம்பு ரெடி.
Comments
Post a Comment