வாழைக்காய் மசாலா

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் - ஒரு துண்டு
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 3

செய்முறை:

முதலில் வாழைக்காயை தோல் உரித்து துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், பெருஞ்சீரகம், ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
இத்துடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
மேலும் தேவையான உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
பின் வேக வைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் சேர்ந்து வரும்போது தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக வெந்ததும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான வாழைக்காய் மசாலா தயார்

Comments