சம்மர் சாலட் |summer salad |how to make salad |salad recipes in tamil |how to make salad in tamil

தேவையானவை :

சின்ன வெங்காயம் - தேவைக்கு
பீட்ரூட் - தேவைக்கு
தக்காளி - தேவைக்கு
முள்ளங்கி - தேவைக்கு
முளை கட்டிய பச்சை பயறு - 1/4 கப்
வெள்ளரிக்காய் - 1/4 கப்
எலுமிச்சைபழம் - 1
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய கொத்தமல்லி தழை - 1/4 கப்
இந்துப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
முட்டைகோஸ் - 1/2 கப்

செய்முறை :

வெங்காயம், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி போன்றவைகளை சிறிதாக நறுக்கி தலா கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய், முட்டைகோஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும்.
முளைகட்டிய பச்சைபயறு,கொத்தமல்லி தழை ,இந்துப்பு ,மிளகு ஆகியவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
இந்த சாலட்டை மதிய உணவுக்கு முன்பு ருசிக்கலாம்.

மருத்துவ பலன்:

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்ச்சிப்படுத்தும்.
உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அனைத்து வகையான புற்று நோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது.
எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.

Comments