சந்தன மரக்காய் தொக்கு | Sandalwood Tree Thokku in Tamil

தேவையானவை :

  1. சந்தன மரக்காய் - 1 கப்
  2. மரக்கோதுமை தூள் - 1/4 கப்
  3. சீரகம் - 1/4 டீஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் - 1
  5. நெய் - 3 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு முந்திரிபருப்பு - 5
  8. நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்

செய்முறை :

  • அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு நீர் ஊற்றி சந்தன மரக்காயை சிறிது நேரம் வேக வைத்து இறக்கவும்.
  • கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், பூண்டு சேர்த்து கிளறி விடவும்.
  • அவை பொன்னிறமானதும் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து லேசாக வதக்கவும். 
  • அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி, உப்பு ஆகியவற்றைப் போட்டு லேசாக வதக்கவும். 
  • பின்னர் மரக் கோதுமை தூளை சேர்த்து கிளறுங்கள். 
  • பின்பு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதிக்க தொடங்கியதும் வேக வைத்த சந்தனமர காயை சேர்க்கவும். 
  • முந்திரியையும் சேர்த்து கிளறவும். 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறலாம்.
  • சந்தன மரக்காய், மரக்கோதுமை உணவு உடல்நலத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும். இந்த உணவை முனிவர்கள் விரும்பி சாப்பிட்டார்கள். அதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
  • இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல்வேறு விதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். கொழுப்பு, ரத்த கொதிப்பு குறையும். இது சருமத்திற்கும், கூந்தலுக்கும் உகந்தது.

பின்குறிப்பு:

  • சந்தனம் மரக்காய் பச்சையாக கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் உலர்ந்தது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
  • அதனை வாங்கி சில மணி நேரம் நீரில் ஊறவைத்து விட்டு பயன்படுத்தலாம்.
  • மரக் கோதுமை என்பது கோதுமையில் ஒரு வகையாகும். 
  • சிறுதானியங்கள் விற்பனை செய்யும் கடைகளில் இது கிடைக்கும். இதனை வாங்கி தூளாக்கி தேவைக்கு பயன்படுத்துங்கள். 
  • மரக் கோதுமையை ஐரோப்பிய நாடுகளில் 'சூப்பர் ஃபுட்' என்று அழைப்பார்கள். அந்த அளவுக்கு அதில் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. 

Comments