பீர்க்கங்காய் அடை| peerkangai recipes in tamil |peerkangai adai

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 1
புழுங்கல் அரிசி - 1/4 கிலோ
பச்சரிசி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
கொள்ளு - ஒரு கைப்பிடி
உளுந்தம் பருப்பு - ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி கொத்தமல்லி தலை - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - 2 சிட்டிகை

தாளிக்க:

கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு  - 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, கொள்ளு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றை ஒன்றாக கலந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
இத்துடன் பெருஞ்சீரகம், சீரகம், தனியா, பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து பொடி ரவை பதத்திற்கு அரைக்கவும்.
பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பீர்க்கங்காய், வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியதை, அப்படியே அரைத்த மாவுடன் சேர்த்து கலக்கவும்.
தோசைக் கல் சூடானதும் மாவை ஊற்றி பொன்னிறமாக வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். பீர்க்கங்காய் அடை ரெடி.

Comments