Skip to main content
மக்காச்சோளம் ரொட்டி | மக்காச்சோளம் ரொட்டி செய்வது எப்படி
தேவையானவை :
- மக்காச்சோள மாவு - 1 கப்
- தண்ணீர் - 1/2 கப்
செய்முறை :
- அகன்ற பாத்திரத்தில் மக்காச்சோள மாவைக் கொட்டி அதனுடன் அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- சிறிதளவு வெந்நீரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- அதனை சப்பாத்தி மாவு கட்டையால் தேய்த்து ரொட்டிகளாக தயார் செய்து கொள்ளவும்.
- ரொட்டியின் விளிம்பில் விரிசல் ஏற்படும் அதனால் பட்டர் பேப்பரில் மாவை வைத்து மூடி அதன் மேல் பகுதியில் சப்பாத்தி மாவு கட்டையை தேய்த்தும் தயார் செய்யலாம்.
- சிறு தீயில் தவாவை வைத்து ரொட்டியை பரப்பி பொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்கவும். கருப்பு நிறம் வரும் வரை வைத்துவிடக்கூடாது.
- இந்த மக்காச்சோளம் ரொட்டி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காது. இது சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கும் ஏற்றது. சிறுநீரக கல் வராமலும் தடுக்கும்.
Comments
Post a Comment