தேவையானவை :
- கவுனி அரிசி (பிளாக் ரைஸ்) - 1 கப்
-
பச்சை பட்டாணி - 1/4 கப்
-
நறுக்கிய கேரட் - 1/4 கப்
-
நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்
-
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கவும்) சீரகம் - 1/2 டீஸ்பூன்
-
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
-
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
-
உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
- 4 கப் தண்ணீரில் அரசியை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறுங்கள்.
- பின்னர் வெங்காயம் பட்டாணி, கேரட், பீன்ஸ், ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
- அவை நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
- பின்னர் அரிசியையும் அதனை ஊற வைத்த தண்ணீரையும் ஊற்றி வேக வைக்கவும்.
- 8 விசில் வரும் வரை அல்லது 45 நிமிடங்கள் வேகவைத்து சாப்பிடலாம். சாதாரண அரிசியைவிட இந்த கருப்பு அரிசி மிகவும் ஏற்றது.
- இதில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் புரதசத்து உள்ளடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நெருங்காது,இதயத்திற்கும் நல்லது. கருப்பு அரிசிக்கு ஆன்டி கேன்சர் என்ற பெயரும் உண்டு.
- முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை சாப்பிட்டார்கள். குறிப்பாக சீனாவில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும் என்று சட்டமும் இருந்தது.
குறிப்பு :
நீங்கள் பயன்படுத்தும் அரிசியில் பழசும் புதுசும் கலந்திருந்தால் வேகும் நிலையிலும் மாற்றம் ஏற்படும். அதனால் சரியான பதத்தில் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
Comments
Post a Comment