பீட்ரூட் அல்வா | Beetroot Halwa in Tamil

தேவையானவை :

  1. துருவிய பீட்ரூட் - 1கப்
  2. பால் - 1 1/2 கப்
  3. முந்திரி - 5
  4. நெய்-1 1/2 டீஸ்பூன்
  5. ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் சீனித்துளசி தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை :

  • கடாயை சிறு தீயில் வைத்து நெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை கொட்டவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • பின்பு பால் ஊற்றி ஏலக்காய்த்தூள், முந்திரி, சீனி துளசி தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். 
  • பால் சுண்டும் வரை கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம். 
  • இது தசைகள் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும். இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. 
  • இதில் இனிப்பு சுவை அதிகம் இருந்தாலும் சீனித்துளசி தூள் கலந்து இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

பின்குறிப்பு :

சீனி துளசி என்பது சர்க்கரையை விட பல மடங்கு இனிப்புச் சுவை கொண்டது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மூலிகை உணவு இது. 'ஆர்கானிக் ஸ்டோர்' களில் கிடைக்கும். உங்கள் வீடுகளிலும் எளிதாக வளர்த்து பயன்படுத்தலாம்.

Comments