ராஜ்மா கிரேவி | Rajma gravy for chapathi

தேவையானவை:

  1. ராஜ்மா - 1 கப்
  2. நறுக்கிய சின்ன வெங்காயம் -அரை கப் நறுக்கிய தக்காளி -அரை கப் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4
  3. கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
  5. கல் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவைக்கு
  6. சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை:

  • ராஜ்மா என்பது  'Red Kidney Beans' என்று அழைக்கப்படும் பெரிய வகை பயறு.
  • இதனை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • வதங்கியதும் மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, தனியாத்தூள், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.
  • பின்னர் தக்காளியை கொட்டி கிளறவும். இறுதியில் ராஜ்மாவை கொட்டி ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

இதன் ஆரோக்கிய பலன்:


இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.
இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இதய படபடப்பை சீராக்கும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

Comments