பட்டாணி மசாலா | Peas masala

தேவையானவை :

  • பட்டாணி - 2 கப்
  • சின்ன வெங்காயம் - அரை கப்
  • நெய் - 4 டீஸ்பூன்
  • கருவாப்பட்டை - 1
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • கல் உப்பு - தேவைக்கு
  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
  • தக்காளி - 3 (நறுக்கவும்)
  • மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் கொத்தமல்லி தழை - தேவையான அளவு

செய்முறை:

  1. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும்.
  2. அதில் அரைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் ஆகியவற்றைக் கொட்டி லேசாக கிளறவும். 
  3. பின்னர் தக்காளி, பட்டாணி அடுத்தடுத்து கொட்டி நன்றாக வதக்கவும். 
  4. வதங்கிய உடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும். 
  5. எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

இதன் ஆரோக்கிய பலன்:

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண்களுக்கு நல்லது.
சருமப் பொலிவிற்கும், கூந்தல் வலுவுக்கும் துணைபுரியும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும்.

குறிப்பு :

பாக்கெட்டில் அடைத்து விற்கும் பட்டாணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Comments