தர்பூசணி சப்ஜா ஜூஸ் | தர்பூசணி ஜூஸ் | watermelon juice | summer recipes in tamil

தர்பூசணி சப்ஜா ஜூஸ் | தர்பூசணி ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  1. தர்பூசணி - 1 
  2. சப்ஜா விதை- 2 டீஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
  4. புதினா இலை- சிறிதளவு 
  5. தேன் - தேவைக்கு

செய்முறை :

  • சப்ஜா விதையை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தர்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • பின்னர் தர்பூசணி கூழுடன் சப்ஜா விதை ,தேன் ,எலுமிச்சை சாறு ,புதினா இலை சேர்த்து கலக்கவும். 
  • அதனை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு சுவைக்கவும்.
  • குளு குளு தர்பூசணி ஜூஸ் தயார்.

Comments