வாழைப்பூ வடை | Banana flower vada | Banana flower vada in tamil

வாழைப்பூ வடை

தேவையான பொருட்கள் :

நறுக்கிய வாழைப்பூ- ஒரு கப்
துவரம்பருப்பு - கால் கப் கடலைப்பருப்பு - அரை கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
காய்ந்த மிளகாய் - ஐந்து
தேங்காய் துருவல் - கால் கப் பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கு கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

வாழைப்பூவை உதிரியாக்கி கொள்ளுங்கள். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ஆகியவற்றை நீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
காய்ந்த மிளகாயையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் பருப்பு வகைகளுடன் மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மாவு கலவையுடன் வாழைப்பூவை கொட்டி சிறிது நேரம் ஊறவைத்து வடைகளாகத் தட்டி எடுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்தெடுங்கள். சுவையான வாழைப்பூ வடை தயார்.

Comments