Skip to main content
தக்காளி சாதம் | tomato rice in tamil | variety rice in tamil | easy lunch recipes
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள் :
- சாதம்- 250 கிராம்
- மிளகாய் வற்றல்-4 அல்லது 5
- கடலைப்பருப்பு- அரை ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
- பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி- அரை கிலோ
- கடுகு- ஒரு ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிது
- உப்பு- சுவைக்கேற்ப
- வெங்காயம்-2 அல்லது 3
செய்முறை :
- முதலில் அரிசியை நீரில் கழுவி சுத்தம் செய்து அளவான நீரில் வேக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- தக்காளியை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். தக்காளிப் பழம் நன்கு வதங்கியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், எல்லாவற்றையும் சேர்த்து சிறிது நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும் .
- சாதம் வெந்ததும் ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும் சாதம் நன்றாக குழையாமல் உதிரியாக வடிக்கவும்.
- தக்காளி நன்றாக கொதித்து கெட்டியான பதம் வந்ததும் வாணலியை கீழே இறக்கவும் ஆற வைத்த சாதத்தை அதில் போட்டு கரண்டியால் கிளறவும்.
- கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
- சுவையான தக்காளி சாதம் தயார் .
Comments
Post a Comment